பர்கூர் தாமரைகரை கிராமத்தில் குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பர்கூர் தாமரைகரை கிராமத்தில் குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்தியூர்
பர்கூர் தாமரைகரை கிராமத்தில் குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் தாமரைகரை கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று காலை 9 மணி அளவில் தாமரைகரை பஸ் நிறுத்தம் முன்பு உள்ள ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சரவணன், கிராம ஊராட்சி ஆணையாளர் சிவசங்கர், பர்கூர் ஊராட்சி செயலாளர் குமார் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குடிநீர் வினிேயாகிக்க கோரி...
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘தாமரைகரை பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து பொது குழாய் மூலம் எங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனை குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் கடந்த 3 நாட்களாக எங்கள் பகுதிக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் தாமரைகரையில் வீரபத்திர சாமி கோவில் திருவிழா 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் வந்துள்ளதால் தண்ணீரின் தேவை அதிகரித்து உள்ளது. எனவே திருவிழா அன்று லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும், ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.
அதற்கு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கூறும்போது, ‘நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த ரோட்டில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story