மது, புகையிலை விற்ற 3 பேர் கைது
நாகா்ேகாவிலில் மது,புகையிைல விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகா்கோவில்:
நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று ஆம்னி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்டதாக பள்ளிவிளையை சோ்ந்த ஜேசுபால் (வயது 78) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 4 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஆறாட்டு பகுதியில் உள்ள ஒரு கடையில் போலீசார் சேதனை நடத்தியபோது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. இதுதொடர்பாக கடை உரிமையாளர் ஆசாரிமார் தெருவை சேர்ந்த தங்கசுயம்புவை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த 10 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் கம்பளம் பகுதியில் புகையிலை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ஏசுராஜ் (41) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 7 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story