உலக சுகாதார தின விழா


உலக சுகாதார தின விழா
x
தினத்தந்தி 8 April 2022 3:36 AM IST (Updated: 8 April 2022 3:36 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தின விழா நடந்தது.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தின விழா நடந்தது. தலைமை டாக்டர் செந்தில் சேகர் தலைமை தாங்கினார். டாக்டர் தேவி பிரபா கல்யாணி, தலைமை செவிலியர் கணபதியம்மாள், செஞ்சிலுவை சங்க கிளை தலைவர் அரிகர சுப்பிரமணியன், நகராட்சி கவுன்சிலர் விஜய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் ராஜாமணி வரவேற்று பேசினார்.

சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். தொடர்ந்து அவரது தலைமையில், அனைவரும் சுகாதார தின உறுதிமொழி ஏற்றனர். சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வக்கீல்கள் ராம்குமார், சதீஷ், தி.மு.க. மாவட்ட இளைஞரணி கார்த்தி, கே.எஸ்.எஸ்.எம்.சங்கர், ஜலால், சபரிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் மதிவாணன் நன்றி கூறினார்.

Next Story