நீராழி மண்டபத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வசந்த உற்சவம்


நீராழி மண்டபத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வசந்த உற்சவம்
x
தினத்தந்தி 8 April 2022 3:37 AM IST (Updated: 8 April 2022 3:37 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நீராழி மண்டபத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வசந்த உற்சவம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு தினமும் எண்ணற்ற பேர் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். இந்த கோவிலில் கோடைக்காலத்தையொட்டி சித்திரை மாத வசந்த உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவமானது நீராழி மண்டபத்தில் வைத்து நடைபெறும். இந்தநிலையில் ஒரு சில காரணங்களால் நீராழி மண்டபத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இந்த உற்சவம் நடைபெறவில்லை. ஆதலால் கோவிலில் உள்ள வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் வைத்து நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி 40 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமான நடைமுறையில் அதாவது நீராழி மண்டபத்தில் வைத்து வசந்த உற்சவம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி நீராழி மண்டபத்தில் நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ெரங்கமன்னார் எழுந்தருளினர்.தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story