அனுமதி இன்றி மரங்களை வெட்டியவருக்கு அபராதம்


அனுமதி இன்றி மரங்களை வெட்டியவருக்கு அபராதம்
x
தினத்தந்தி 8 April 2022 3:41 AM IST (Updated: 8 April 2022 3:41 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே அனுமதி இன்றி மரங்களை வெட்டியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடையம்:
கடையம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட மாதாபுரம் கிராமம் பகுதியில், அனுமதி இன்றி மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக கோவிந்தபேரி பீட் வனக்காப்பாளர் பெனாசிருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது பிள்ளைக்குளத்தை சேர்ந்த தினகரன் என்பவர் ஓட்டி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் லாரியில் அனுமதி இன்றி மரங்களை வெட்டி கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவுப்படி, கடையம் வனச்சரக பயிற்சி உதவி வனப்பாதுகாவலர் ராதை அறிவுறுத்தலின் பேரில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. 

Next Story