3 வாலிபர்களை போலீஸ் காவலில் விசாரிக்க கடலாடி கோர்ட்டு அனுமதி


3 வாலிபர்களை போலீஸ் காவலில் விசாரிக்க கடலாடி கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 8 April 2022 5:26 PM IST (Updated: 8 April 2022 5:26 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் 3 வாலிபர்களை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கடலாடி கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

சாயல்குடி, 
கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் 3 வாலிபர்களை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கடலாடி கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. 
கல்லூரி மாணவி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள பாலையம்பட்டியை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி தனது காதலன் ஹரிகிருஷ்ணனுடன் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரைக்கு வந்துள்ளார். 
அப்போது கடற்கரையில் சுற்றித்திரிந்த பத்மாசுரன், விக்னேஷ், அஜித் குமார் ஆகிய 3 வாலிபர்கள் காதல் ஜோடியை மிரட்டி நகை, செல்போன் உள்ளிட்ட பொருட் களை பறித்துக்கொண்டு கல்லூரி மாணவியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் 3 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கோர்ட்டில் ஆஜர்
போலீசார் விசாரணையை தொடர்ந்து இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கற்பழிப்பு வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் சாயல்குடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வாலிபர்கள் 3 பேரையும் கடலாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
 அங்கு வாலிபர்கள் 3 பேரையும் 3 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்ட நிலையில் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கடலாடி கோர்ட்டு நீதிபதி முத்துலட்சுமி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
விசாரணை
 இதையடுத்து  சாயல்குடி போலீசார் போலீஸ் நிலையத் திற்கு 3 வாலிபர்களையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று விசாரணையை தொடங்கினர். விசாரணைக்கு பின்னர் 3 வாலிபர்களும் மீண்டும் கடலாடி கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

Next Story