ஆறுகளில் கழிவுநீர் கலந்தால் தொழிற்சாலை உரிமம் ரத்து. கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை


ஆறுகளில் கழிவுநீர் கலந்தால் தொழிற்சாலை உரிமம் ரத்து. கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 April 2022 6:18 PM IST (Updated: 8 April 2022 6:18 PM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலைகளின் கழிவுநீர் ஆறுகளில் கலந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர்

தொழிற்சாலைகளின் கழிவுநீர் ஆறுகளில் கலந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறையின் சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறையின் சார்பில் நமது மாவட்டத்தில் ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் தினசரி வீட்டு குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதற்கென்று அமைக்கப்பட்ட குப்பைத் தொட்டியில் போட வேண்டும். வீட்டு கழிவுநீர் ஆறுகளில் கலப்பதை தவிர்க்க வேண்டும்.

உரிமம் ரத்து

குப்பைகளை உரமாக்குவதற்கு அனைத்து நகராட்சிகளில் இருந்தும் கடிதம் அனுப்பி வைக்க வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை கண்காணிக்க வருவாய் கோட்ட அளவிலான குழு ஒன்றை அமைத்து கண்காணிக்க வேண்டும். தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆறுகளில் கலப்பது தெரியவந்தால் அந்த தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட சுறறுச்சூழல் அலுவலர் பிரகாஷ், நகராட்சி ஆணையாளர்கள் ஷகிலா, ஜெயராமராஜா, ஸ்டான்லிபாபு, பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story