சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு சிறப்பு பயிற்சி


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
x

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு சிறப்பு பயிற்சியும், ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சார்பில் பயங்கரவாதிகளை எதிர்கொள்வது குறித்து சிறப்பு பயிற்சியும், ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு படை கமிஷனர் பிரேந்தர்குமார், தலைமை பாதுகாப்பு படை கமிஷனர் சந்தோஷ் சந்திரன், துணை பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் ரெயில் நிலையத்தில் புகும் பயங்கரவாதிகளிடம் இருந்து எவ்வாறு நூதனமாக தப்பி செல்வது, பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் எதிர் தாக்குதல் நடத்துவது, துப்பாக்கிகளை எவ்வாறு கையாள்வது, பயங்கரவாதிகளை திசை திருப்புவது, பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது போன்ற யுக்திகளை ரெயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் செய்து காட்டினர்.


Next Story