அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரக்கோணம்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கைனூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில் மாணவர்கள் பாடல்கள் பாடி ரெயில் பயணிகுளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபடுத்தினர்
.
இதனையடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியை புனிதா, ஆசிரியைகள் சுகந்தி, புஷ்பராணி மற்றும் சுகந்தி வினோதினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story