வேடசந்தூரில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
வேடசந்தூரில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
வேடசந்தூர்:
குஜிலியிம்பாறை ஒன்றியம் சி.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர் வீலா. இவர் கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த பூவாணி என்ற ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு மாற்றுப்பணியாக மாறுதல் செய்யப்பட்டார்.
இதையடுத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குஜிலியம்பாறை வட்டார கிளை சார்பில் வேடசந்தூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதில் ஆசிரியர் லீலாவை மீண்டும் சி.அம்மாபட்டி பள்ளிக்கு மாற்றவேண்டும், அல்லது சி.அம்மாபட்டி பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணியை காலிப்பணியிடமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு குஜிலியம்பாறை வட்டார தலைவர் பானுமதி தலைமை தாங்கி பேசினார். வட்டார செயலாளர் அருட்செழியன், வட்டார பொருளாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினார்கள். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story