வேலூர் அருகே தீக்குளித்த லாரி டிரைவர் சாவு
வேலூர் அருகே தீக்குளித்த லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேலூர்
வேலூர் அருகே உள்ள செதுவாலை இந்திராநகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 52). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அண்ணாமலைக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி மது குடிக்க குடும்பத்தினரிடம் பணம் கேட்டார். அவர்கள் தர மறுத்ததால் மனமுடைந்த அண்ணாமலை வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் உடல் கருகிய நிலையில் படுகாயமடைந்த அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story