குறுவை சாகுபடி தொடங்குவதற்கு முன்பு புதிய தடுப்பணை கட்டப்படுமா?


குறுவை சாகுபடி தொடங்குவதற்கு முன்பு புதிய தடுப்பணை கட்டப்படுமா?
x
தினத்தந்தி 8 April 2022 8:05 PM IST (Updated: 8 April 2022 8:05 PM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே குடமுருட்டி ஆற்றில் குறுைவ சாகுபடி தொடங்குவதற்கு முன்பு புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலங்கைமான்:
வலங்கைமான் அருகே குடமுருட்டி ஆற்றில் குறுைவ சாகுபடி தொடங்குவதற்கு முன்பு புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
குடமுருட்டி ஆறு 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள  குடமுருட்டி ஆறு பிரதான பாசன ஆறாக உள்ளது. வலங்கைமானை அடுத்த சந்திரசேகரபுரம் அருகே லாயம், ஆதிச்ச மங்கலம், விருப்பாச்சிபுரம், வலங்கைமான், வளையுமாபுரம், கீழநல்லம்பூர்,  காங்கயநகரம் ஆகிய பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யும் வகையில் சந்தன வாய்க்கால் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தில்லையம்பூர் வாய்க்கால் தில்லையம்பூர், விசலூர், வேதப்பன்ேட்டை, நாகராசன்பேட்டை உள்ளிட்ட பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யும் வகையில் அமைந்துள்ளது. 
தண்ணீர் செல்ல முடியாத நிலை
இந்த 2  வாய்க்கால்களுக்கும் பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில்  குடமுருட்டி ஆற்றில் தடுப்பணை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.  இந்த தடுப்பணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்துள்ளது. மேலும் அணை முழுவதும் உடைந்துள்ளது. இதனால் தில்லையம்பூர் மற்றும் சந்தன வாய்க்கால் மூலம் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. 
புதிய தடுப்பணை 
உடைந்த தடுப்பணைக்கு பதிலாக புதிய தடுப்பணை கட்டாவிட்டால் குறுவை சாகுபடி நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறுவை சாகுபடி தொடங்குவதற்கு முன்பு குடமுருட்டி ஆற்றில் உடைந்துள்ள தடுப்பணைக்கு பதிலாக புதிய தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story