ரூ.25 லட்சம் கஞ்சா கடத்த முயன்ற 3 பேர் கைது


ரூ.25 லட்சம் கஞ்சா கடத்த முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 April 2022 8:16 PM IST (Updated: 8 April 2022 8:16 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு ரூ.25 லட்சம் கஞ்சா கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு ரூ.25 லட்சம் கஞ்சா கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடலோர காவல் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
அப்போது வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் கீற்றுகள் ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு மினி லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்துமாறு போலீசார் கை காட்டினர். ஆனால் அந்த மினி லாரி நிற்காமல் சென்றது. உடனே போலீசார், அந்த மினிலாரியை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர். 
ரூ.25 லட்சம் கஞ்சா பறிமுதல்
அந்த மினிலாரியில் இருந்த கீற்றுகளுக்கு அடியில் 9 சாக்கு மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் சாக்குமூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் 270 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.  அதன் மதிப்பு ரூ. ரூ.25 லட்சம் ஆகும்.
இதனைத்தொடர்ந்து கஞ்சா மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மினிலாரி டிரைவர் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த சுரேஷ்(வயது 40) என்பவரை பிடித்து வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். 
3 பேர் கைது
விசாரணையில், ஆறுகாட்டுத்துறையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்றதும், இந்த கடத்தலில் ஆறுகாட்டுதுறையை சேர்ந்த பாரதிதாசன்(42), ஈரோடு அகதிகள் முகாமில் உள்ள இலங்கையை சேர்ந்த காந்தரூபன்(52) ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. 
இதுதொடர்ந்து டிரைவர் சுரேஷ், பாரதிதாசன் மற்றும் அவரது வீட்டில் தங்கியிருந்த காந்தரூபன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story