தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு
மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு
மன்னார்குடி:
மன்னார்குடி உட்கோட்ட போலீஸ் சரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்குகள் குறித்து வருடாந்திர ஆய்வு மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்து கொண்டு மன்னார்குடி உட்கோட்ட போலீஸ் சரகத்திற்குட்பட்ட மன்னார்குடி நகரம், மன்னார்குடி தாலுகா, மன்னார்குடி அனைத்து மகளிர், நீடாமங்கலம், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம், வடுவூர், தேவங்குடி ஆகிய போலீஸ் நிலையங்களில் கடந்த 1 ஆண்டாக உள்ள குற்ற வழக்குகள், பெண்கள் மீதான வன்கொடுமை குறித்த வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள், அவற்றின் விசாரணைகள் குறித்த கோப்புகளை அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், மன்னார்குடி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னைஅபிராமி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story