திருவள்ளூர் மாவட்டத்தில் பஸ் டிரைவரை தாக்கிய 6 பேருக்கு போலீசார் வலைவீச்சு


திருவள்ளூர் மாவட்டத்தில் பஸ் டிரைவரை தாக்கிய 6 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 April 2022 8:29 PM IST (Updated: 8 April 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் பஸ் டிரைவரை தாக்கிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா சொரக்காய் பேட்டை கிராமத்தில் இருந்து அரசு பஸ் சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே ஆயில் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது 48) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது சிலர் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் வெங்கடேசன் அவர்களை படிக்கட்டில் இருந்து பஸ்சுக்குள் வரும்படி கூறினார். இதையடுத்து அவர்கள் பஸ் டிரைவரை தாக்கி விட்டு ஓடிவிட்டனர்.

இது குறித்து பஸ் டிரைவர் வெங்கடேசன் ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை தாக்கி விட்டு ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர்.


Next Story