வேளுக்குடியில் புதிய அங்காடி கட்டும் பணி தொடங்கியது


வேளுக்குடியில் புதிய அங்காடி கட்டும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 8 April 2022 8:34 PM IST (Updated: 8 April 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வேளுக்குடியில் புதிய அங்காடி கட்டும் பணி தொடங்கியது.

கூத்தாநல்லூர்:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வேளுக்குடியில் புதிய அங்காடி கட்டும் பணி தொடங்கியது. 
பழுதடைந்த கட்டிடம் 
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அங்காடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் அந்த பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த கட்டிடம் பழுதடைந்தது. மேலும் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவில் காணப்பட்டது. மழை காலங்களில் தண்ணீர் கட்டிடத்தின் விரிசல்கள் வழியாக உள்ளே சென்று அத்தியாவசிய பொருட்களை சேதப்படுத்தியது.  
கோரிக்கை 
இதனால் பழுதடைந்த அந்த கட்டிடத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு, மற்றொரு வாடகை கட்டிடத்தில் வைத்து அந்த பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.  பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய  அங்காடி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 
அங்காடி கட்டும் பணி தொடங்கியது
இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியானது. இதன்  எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து புதிய அங்காடி கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-

Next Story