தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி செய்வதில் சிக்கல்


தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி செய்வதில் சிக்கல்
x
தினத்தந்தி 8 April 2022 8:40 PM IST (Updated: 8 April 2022 8:40 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
அனல் மின்நிலையம்
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இங்கு மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக வ.உ.சி. துறைமுகத்துக்கு நிலக்கரி கொண்டு வரப்பட்டு, கன்வேயர் பெல்ட் மூலம் நேரடியாக அனல் மின் நிலையத்துக்குள் நிலக்கரி கொண்டு செல்லப்படும்.
கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், அனல் மின்நிலையத்தில் உள்ள அனைத்து எந்திரங்களையும் முழுமையாக இயக்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
நிறுத்தம்
நேற்று காலையில் அனல் மின்நிலையத்தில் உள்ள 1-வது மின்உற்பத்தி எந்திரத்தை தவிர மற்ற 4 மின்உற்பத்தி எந்திரங்களும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மதியத்துக்கு பிறகு மற்ற எந்திரங்கள் படிப்படியாக இயங்க தொடங்கி உள்ளன. மாலையில் 5-வது எந்திரத்தை தவிர மற்ற 4 மின்உற்பத்தி எந்திரங்களிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதில் சுமார் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இதுகுறித்து அனல் மின்நிலைய தலைமை பொறியாளர் கிருஷ்ணகுமாரிடம் கேட்டபோது, அனல் மின்நிலையத்தில் 8 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. இங்கு உள்ள 4 மின்சார உற்பத்தி எந்திரங்களில் மின்உற்பத்தி நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

Next Story