‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
தூர்வாராத சாக்கடை கால்வாய்
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சி முத்தனம்பட்டியில் சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் மண், குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. அதன்மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க சாக்கடை கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும். -பிரேம், முத்தனம்பட்டி.
சேதம் அடைந்த சாலை
தேனி புதிய பஸ் நிலையத்தின் அருகே உள்ள விஸ்வநாததாஸ்நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. இதனால் சாலை சேதம் அடைந்து விட்டது. மேலும் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. எனவே சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வேந்திரன், தேனி.
மின்கம்பம் மாற்றப்படுமா?
சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டியில் அய்யாபட்டி சாலை ஓரத்தில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி எலும்புகூடு போன்று காட்சி அளிக்கிறது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்ற வேண்டும். -ஜான், வேம்பார்பட்டி.
சாலையில் அபாய பள்ளங்கள்
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சாலையில் கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகிவிட்டன. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.எனவே சாலையில் உள்ள அபாய பள்ளங்களை சரிசெய்ய வேண்டும். -கணேசன், திண்டுக்கல்.
Related Tags :
Next Story