விவசாயிகள் நல உரிமை சங்க கூட்டம்
கீழ்வேளூரில் விவசாயிகள் நல உரிமை சங்க கூட்டம் நடைபெற்றது.
சிக்கல்:
கீழ்வேளூரில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட முன்கள பொறுப்பாளர் சுரேஷ்பாபு வரவேற்றார்.மாநில துணை தலைவர் வடுவூர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். டெல்டா மாவட்டங்களில் ஆறு மற்றும் வாய்க்கால்கள் தூர்வாருவதற்கு ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தூர்வாரும் விவசாயிகள் சங்கங்களின் மேற்பார்வையில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நாகை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாநில தலைவர் ராசபாலன், மாநில அமைப்பு செயலாளர் மன்னை இளஞ்சேரன், நாகை மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜுலு, நாகை மாவட்ட முன்கள பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் கடலூர், மயிலாடுதுறை திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story