மணிபர்சை காவல்துறையிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு


மணிபர்சை காவல்துறையிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 8 April 2022 10:09 PM IST (Updated: 8 April 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

இனிப்பு கடையில் யாரோ தவறவிட்ட மணிபர்சை காவல்துறையிடம் ஒப்படைத்தவா் பாராட்டப்பட்டாா்.

விழுப்புரம், 

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் எதிரில் இனிப்பு கடை வைத்து நடத்தி வருபவர் நாகராஜ் (வயது 45). இவருடைய கடையில் யாரோ விட்டுச்சென்ற சிறிய மணிபர்ஸ் கிடைத்தது. அந்த பர்சை நாகராஜ் எடுத்து பார்த்தபோது அந்த மணிபர்சிற்குள் ரூ.7 ஆயிரம் மற்றும் 2 வங்கி கணக்கு புத்தகங்கள், ஆதார் கார்டு ஆகியவை இருந்தது. ஆனால் வெகு நேரமாகியும் அந்த மணிபர்சை உரிமைகோரி யாரும் வரவில்லை.
இதையடுத்து நாகராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் அந்த மணிபர்சை ஒப்படைத்தார். நாகராஜின் நேர்மையை பாராட்டி அவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

Next Story