மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 8 April 2022 10:09 PM IST (Updated: 8 April 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சின்னசேலம், 

சின்னசேலம் வட்டார வள மையம் மூலம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பேரணி சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சின்னசேலம் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் பேரணியை தொடங்கி வைத்தார். 

வட்டார கல்வி அலுவலர் தனபால், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் வரவேற்றார்.  இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் வரதராஜன், சக்திவேல், மாரியப்பன், ரவிக்குமார், சிறப்பாசிரியர்கள் மணிசேகரன், புஷ்பதெரஸ், சாந்தி, வளர்மதி, ஜெய கண்ணன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மருத்துவமுகாமின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் தெங்கியானத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

Next Story