மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 8 April 2022 10:21 PM IST (Updated: 8 April 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அருகே உள்ள ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கிருஷ்ணன்(வயது 55). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார் மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணன் பாிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன் உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story