லத்தேரி பஸ்நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல். பெண் உள்பட 2 பேர் கைது
லத்தேரி பஸ்நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கே.வி.குப்பம்
வேலூர் மாவட்டம், லத்தேரி பஸ்நிலையத்தில் லத்தேரி போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக இருந்த 2 பேரைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்த நீதிராஜன் (வயது 49), செல்வம் மனைவி நதியா (32) என்பதும், கூட்டாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து 6 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story