பருத்தி ஏலம்


பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 8 April 2022 11:05 PM IST (Updated: 8 April 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

பருத்தி ஏலம்

மூலனூர், 
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர் திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 1,133 பேர் பருத்தியை கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். 
வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.13,369-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.11,680-க்கும் சராசரி விலையாக ரூ.12,550-க்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 10ஆயிரத்து 329 மூட்டைகள், குவிண்டால் 3,104.58, இதன் மதிப்பு ரூ.4 கோடியே 60 லட்சத்து 3 ஆயிரத்து 334 ஆகும். 25 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Next Story