கும்பாபிஷேக விழா


கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 8 April 2022 11:06 PM IST (Updated: 8 April 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

படைத்தலைவி நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

சிங்கம்புணரி, 
சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடி கிராமத்தில்  பிரசித்தி பெற்ற இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட படைத் தலைவி நாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு திருப் பணிகள் முடிவுற்ற நிலையில் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி கோவிலில் யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பூஜகர் சேவர்கொடி சிவாச்சாரியார் தலைமையில் 4 கரை குலால பூஜகர்கள் 11 பேர் கொண்ட குழுவினர் சிறப்பு வேள்வி நடந்தது. கோ பூஜை, கஜ பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, சுமங்கலி பூஜை, கண்யா பூஜை, நவசக்தி பூஜை, லெட்சுமி மற்றும் மகா பூர்ணாகுதி ஆகிய பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் பட்டு சீர்வரிசை கொண்டு வந்து மரியாதை செய்தனர். யாகசாலையில் இருந்த புனித நீர் விரதமிருந்த கிராமத்தார்கள் தலையில் சுமந்து யாகசாலை வலம் வந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் இருந்த புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம்  நடந்தது. கோவில் பரிவார தெய்வங்கள் அனைத்துக்கும் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து படைத் தலைவி நாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது.  விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் சூரக்குடி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story