சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட கிளையின் மாவட்ட தலைவர் கருமலை தலைமையில் வாழைக்கன்று நட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பணியாளர்களுக்கான 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் அனைத்தும் அரசே ஏற்று நடத்தவேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. வாழையடி, வாழையாக தழைத்தோங்க செய்யுங்கள் என முதல்-அமைச்சரை வலியுறுத்தும் வகையில் வாழைக்கன்று நடப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story