கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் பசுமை சாலை பாலைவனமானது
மரங்கள் வெட்டப்பட்டதால் கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் பசுமை சாலை பாலைவனமானது.
கிணத்துக்கடவு
கோவை -பொள்ளாச்சி இடையே உள்ள சாலை 4 வழிச் சாலையாக மாற்றப்பட்டது.
இந்த சாலையை விரிவாக்கம் செய்ய கோவை- பொள்ளாச்சி இடையே ஆச்சிப்பட்டி, கோவில் பாளையம் தாமரைகுளம், கிணத்துக்கடவு, பிரிமியர் நகர், ஒத்தக்கால் மண்டபம், மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் ரோட்டோரங்களில் நின்றிருந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன.
மரங்களை வெட்டி அகற்றும் போது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் நடப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் சாலை பணிகள் முடிந்து போக்குவரத்தும் தொடங்கி பல மாதங்கள் ஆகிறது.
ஆனால் சாலையோரத்தில் மரக்கன்றுகள் மட்டும் இன்னும் நடப்பட வில்லை.
இதனால் இந்த சாலையில் மரங்கள் எதுவும் இல்லாததால் பசுமை இழந்து பாலைவனம் போன்று காணப்படுகிறது.
இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் பயணிகள் சிறிது ஓய்வெடுக்க நிழல் தேவை என்றால் கூட பயணிகள் நிழற்குடையைதான் தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதுகுறித்து வாகன ஓட்டிகள் அவர்கள் கூறியதாவது:- கோவை-பொள்ளாச்சி சாலையில் ஏராளமான மரங்கள் இருந்தால் பசுமையாக காணப்பட்டது.
சாலை விரிவாக்கப் பணி மிகவும் அவசியம்தான். அதே நேரத்தில் மரங்களை வெட்டியதற்கு பதிலாக கூடுதலாக மரக்கன்றுகள் நட்டு பராமரித்து இருந்தால் அந்த மரங்கள் இப்போது நன்றாக வளர்ந்து இருக்கும்.
ஆனால் அதிகாரிகள் அதை செய்யவில்லை. எனவே இனியாவது அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story