விருதுநகர் மாணவி யோகாவில் சாதனை
விருதுநகர் மாணவி யோகாவில் சாதனை படைத்தார்.
விருதுநகர்,
விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்த செல்வகணேஷ்- பரிமளா தம்பதியரின் மகள் வர்ஷினி (வயது 9). தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 3 மாதமாக எடுத்த பயிற்சியின் காரணமாக நேற்று நோபிள் சாதனை பதிவிற்காக இந்நகர் தனியார் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் 1 நிமிடத்தில் 17 முறை நிரம்பல பூர்ண சக்கராசனம் செய்து சாதனை படைத்தார். இதற்கு முன் பெங்களூரை சேர்ந்த 14 வயது மாணவி ஒரு நிமிடத்தில் 13 முறை இந்த யோகாசனத்தை செய்தது தான் உலக சாதனையாக இருந்தது. தற்போது விருதுநகர் மாணவி வர்ஷினி இந்த சாதனையை முறியடித்து உலக சாதனை பதிவில் இடம் பெற்றுள்ளார். மாணவி வர்ஷினியை அவரது ஆசிரியைகள் உள்பட பலரும் பாராட்டினர்.
Related Tags :
Next Story