பெங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு மின்சார ரெயில் சேவை தொடங்கியது ஓசூரில் பயணிகள் பூஜை செய்து வரவேற்பு
பெங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு மின்சார ரெயில் சேவை தொடங்கியது. இந்த ரெயிலை ஓசூரில் பயணிகள் பூஜை செய்து வரவேற்றனர்.
ஓசூர்:
பெங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு மின்சார ரெயில் சேவை தொடங்கியது. இந்த ரெயிலை ஓசூரில் பயணிகள் பூஜை செய்து வரவேற்றனர்.
மின்சார ரெயில் சேவை
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக தர்மபுரி செல்லும் மின்சார ெரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்த ரெயில் காலை 7.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு ஓசூரில் 8.30 மணிக்கும், தர்மபுரிக்கு காலை 10.45 மணிக்கு சென்றடையும். பின்னர் மாலை 4.30 மணிக்கு தர்மபுரியில் இருந்து புறப்பட்டு, இரவு 7.30 மணிக்கு பெங்களூருவை மின்சார ரெயில் சென்றடையும் என்று தென்மேற்கு ரெயில்வே துறை அறிவித்து இருந்தது.
இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து நேற்று இந்த மின்சார ரெயில் சேவை தொடங்கியது. அதன்படி ஓசூர் வந்த மின்சார ரெயிலுக்கு, பயணிகள், பொதுமக்கள் பூஜை செய்து வரவேற்றனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த ரெயில் இரு மார்க்கமாகவும் பெங்களூரு கண்டோன்மெண்ட், பெங்களூரு கிழக்கு, பையப்பனஅள்ளி, பெலந்தூர் ரோடு, கார்மேலரம், ஆனேக்கல் ரோடு, ஓசூர், கெலமங்கலம், பொியநாகதுணை, ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி, பாலக்கோடு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த நிலையில், ஓசூரில் இருந்து தினமும் ஏராளமானோர் பெங்களூருவுக்கு வேலைக்கு செல்கின்றனர். வர்த்தகர்களும், பல்வேறு தரப்பினரும் தொழில் நிமித்தமாகவும், சொந்த பணிகள் காரணமாகவும் காலையில் பெங்களூருவுக்கு செல்லும் நிலை உள்ளது.
எனவே இந்த ரெயிலை, காலையில் தர்மபுரியில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கினால் ஏராளமானோர் பயனடைவார்கள். இதன் மூலம் ரெயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும். இதற்கு தென்மேற்கு ரெயில்வே துறை அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story