பவார் வீட்டின் மீதான தாக்குதல் மகா விகாஸ் அகாடி அரசை பார்க்க சகிக்காதவர்கள் செய்த சதி- சஞ்சய் ரவாத்
பவார் வீட்டின் மீதான தாக்குதல் மகா விகாஸ் அகாடி அரசை பார்க்க சகிக்காதவர்கள் செய்த சதி என பா.ஜனதாவை சஞ்சய் ரவாத் தாக்கி உள்ளார்.
மும்பை,
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள், மும்பையில் உள்ள சரத்பவாரின் இல்லம் முன்பு நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் நேற்று கூறியதாவது:-
சரத்பவார் இல்லத்தின் மீதான தாக்குதல் துரதிருஷ்டவசமானது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. மேலும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியது.
ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டன. ஆனால் கண்ணுக்கு தெரியாத சக்திகள் தொடர்ந்து சூழலை கெடுக்க முயற்சிக்கிறது. இன்று நடந்ததை போன்ற சம்பவங்கள் தூண்டிவிடப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு ஆட்சியை யாரால் பார்த்து சகித்து கொள்ள முடியவில்லையோ அவர்கள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர் என்றும் அவர் பா.ஜனதாவை மறைமுகமாக சாடினார்.
Related Tags :
Next Story