ஆனைமலையில் எந்திரம் மூலம் நெல் அறுவடை தீவிரம்


ஆனைமலையில் எந்திரம் மூலம் நெல் அறுவடை தீவிரம்
x
தினத்தந்தி 8 April 2022 11:49 PM IST (Updated: 8 April 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் எந்திரம் மூலம் நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.

ஆனைமலை

ஆனைமலையில் எந்திரம் மூலம் நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.
 
நெல் சாகுபடி

ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் வட்டாரத்தில் பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் 5,400 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 2 முறை நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 2-ம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. 

தற்போது அந்த நெல் அறுவடைக்கு தயாரானது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த நெல்லை தீவிரமாக அறுவடை செய்து வருகிறார்கள்.

அறுவடை தீவிரம்

ஆனால் கூலி விவசாய தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக எந்திரம் மூலம் நெல் அறுவடை நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அனைத்து பகுதியிலும் நெல் அறுவடை முடிந்து விடும்.

எனவே அடுத்த மாதம் முதல் மீண்டும் முதற்போக நெல் சாகுபடி செய்ய நாற்று நடவு தொடங்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். 

மேலும் தற்போது அறுவடை செய்யப்படும் நெல், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 


Next Story