நாமக்கல்லில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில்  சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 April 2022 11:58 PM IST (Updated: 8 April 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் நாமக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கோட்ட துணைத்தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமலிங்கம், இணை செயலாளர்கள் ரவி, ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் ஜாகீர் உசேன் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை அரசே நடத்த வேண்டும். பணிக்காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வாழைக்கன்றுகள் வைக்கப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் முருகேசன், இணை செயலாளர் கதிர்வேல், பொதுக்குழு உறுப்பினர் தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story