நாமகிரிப்பேட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
நாமகிரிப்பேட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
ராசிபுரம்:
நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்தில் பிறந்தது முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பகவடிவு தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் செல்வி மற்றும் பழனியம்மாள் முன்னிலை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சென்றாய பெருமாள் வரவேற்றார். டாக்டர்கள் பிரதாப், தர்மராஜ், ஜெயந்தி, நிர்மலாதேவி, சத்யா ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீடு செய்தனர். முகாமை மாவட்ட உதவி திட்ட அலுவலர் மகேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமகிரிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் தயாசங்கர் அறிவுரைகள் வழங்கினார். இந்த முகாமில் 133 மாற்றுத்திறன் கொண்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை உடல் இயக்க நிபுணர் சுஷ்மிதா, சிறப்பு பயிற்றுனர்கள் அருள் ராஜா, சரவணன், ஆசிரியர் பயிற்றுனர்கள் முருகேசன், மகேஸ்வரன், லதா, சியாமளா ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story