மாணவ-மாணவிகள் சாதனை
அபாகஸ் போட்டியில் மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினம் கோல்டன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் படிக்கும் 70- மாணவிகள் ராமநாதபுரத்தில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் கலந்துகொண்டனர். அங்குள்ள சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் மாவட்டத்தை சேர்ந்த 16 பள்ளிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் எஸ்.பி. பட்டினம் கோல்டன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியை சேர்ந்த 34 மாணவ, மாணவிகள் பரிசுகளை பெற்று சாதனை படைத் துள்ளனர். பரிசு பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி யின் தாளாளர்,முதல்வர், ஆசிரிய ஆசிரியைகள், பெற் றோர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story