சொத்து வரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சொத்து வரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சொத்துவரி தொடர்பான நகர்மன்ற அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கருணாநிதி நகராட்சி பொறியாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை உதவியாளர் ஷகிலா பானு வாசித்தார். கூட்டத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள சொத்துவரி தொடர்பான தீர்மான அறிக்கையை வாசித்தபோது, அ.தி.மு.க. கவுன்சிலர் செல்வராஜ் குறுக்கிட்டு சொத்து வரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் செல்வராஜ், சேகர், பாண்டியன், சுப்பிரமணியன் ஆகிய 4 பேரும் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் இருந்த ராஜமாணிக்கம் அம்பிகாபதி உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர் 10 பேர், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் உள்பட 2 பேர், பா.ம.க. வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் உள்ளிட்ட 3 பேர் மொத்தம் 15 உறுப்பினர்களை கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story