வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம்
வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிருக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் சிவனேசன் தலைமை தாங்கினார். தமிழ் துறை தலைவர் சேகர், தனியார் நிறுவன இயக்குனர் விமல்வர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 180 மாணவிகள் தேர்வு பெற்றனர். இவர்கள் சென்னையிலுள்ள பிரபல தனியார் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயற்பியல் துறை தலைவர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். முடிவில் கணினிஅறிவியியல் துறைத் தலைவர் ராமராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story