தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 April 2022 1:07 AM IST (Updated: 9 April 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


ஆபத்தான மின்கம்பம் 
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் பயன்பாடின்றி உள்ள மின் கம்பம் ஒன்று முறிந்து தொங்கிய நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மேலப்புதூர் சர்வீஸ் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் தட்டுத்தடுமாறி இந்த சாலைகளில் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மேலப்புதூர், திருச்சி.

ரேஷன் கடை திறக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சோமரசம்பேட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட வாசன்சிட்டியில் புதிதாக ரேஷன் கடை அமைக்க வாடகைக்கு இடம் கிடைத்துவிட்டது. ஆனால் கடைதான் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள்  பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் விரைவில் ரேஷன் கடை திறக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சோமரசம்பேட்டை, திருச்சி. 

ஒளிராத மின் விளக்குகள் 
திருச்சி நகரம் திருவானைக்காவல் சோதனை சாவடி முதல் நம்பர் 1 டோல்கேட் வரை புதிய கொள்ளிடம் பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.  இந்த பாலத்தில் மொத்தம் 24 பால இணைப்புகள் உள்ளன. ஒவ்வொரு இணைப்பிலும் 6 இருளில் ஒளிரும் மின் விளக்குகள் என்ற அடிப்படையில் மொத்தம் 144 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் தற்போது 57 மின் விளக்குகள் ஒளிரவில்லை. இதனால் பாலத்தில் வெளிச்சமின்மை ஏற்படுகிறது. எனவே புதிய கொள்ளிடம் பாலத்தில் ஒளிராத 57 மின் விளக்குகளை ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நம்பர் 1 டோல்கேட், திருச்சி. 

தெருநாய்களால் அச்சம் 
திருச்சி பொன்மலை 45வது வார்டு பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவற்றில் ஒரு சில தெருநாய்கள் வெறி பிடித்து மற்ற நாய்களை கடித்து குதறுகின்றன.  இதனால் காயமடையும் நாய்கள் காயத்துடன் அப்பகுதியில் சுற்றி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்துடன் காணப்பட்டு வருகின்றன. மேலும் இந்த தெருநாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வெறி நாய்களை பிடித்துச் செல்ல வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பொன்மலை, திருச்சி.



Next Story