வெள்ளிப்பொருட்கள் திருடிய தொழிலாளி கைது
சேலத்தில் பட்டறையில் வெள்ளிப்பொருட்கள் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
-சேலம்:-
சேலத்தில் பட்டறையில் வெள்ளிப்பொருட்கள் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளிப்பட்டறை
சேலம் குகை மூங்கப்பாடி தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 30). இவர் அந்த பகுதியில் வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இங்கு வெள்ளிக்கொலுசு உள்ளிட்ட பல வெள்ளிப்பொருட்கள் தயாரித்து சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலை முடிந்து பட்டறையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது பட்டறை பூட்டு உடைக்கப்பட்டு அங்கு இருந்த 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது.
தொழிலாளி கைது
இது குறித்து அவர் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சந்தேகத்தின் பேரில் அதே பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்த செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த நாகராஜ் (35) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் வெள்ளி பொருட்கள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story