ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 April 2022 2:00 AM IST (Updated: 9 April 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில், ஈரோடு சூரம்பட்டிவலசுவில் உள்ள ஈரோடு மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
ரேஷன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்து வந்த நிலையில், கொரோனா காலத்தில் நிறுத்தி வைத்தனர். அதனை மீண்டும் வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாவட்ட தலைவர்கள் காளியப்பன் (கோவை), மாடசாமி (ஈரோடு), தங்கபூமி (திருச்சி), சாமிநாதன் (நாமக்கல்) மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story