கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு
வள்ளியூரில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் முருகன் கோவில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது. இந்நிலையில் வள்ளியூர் அருகே உள்ள நம்பியான்விளை மெயின் ரோடு அருகே முருகன் கோவிலுக்கு ஒரு ஏக்கர் 68 சென்ட் புஞ்சை நிலம் உள்ளது. இந்த இடத்தில் வள்ளியூர் அருகே உள்ள கிழவனேரியைச் சேர்ந்த திலகர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைப்பதாக அறநிலையத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் முருகன் கோவில் பணியாளர்கள் அங்கு சென்று முள்வேலி அமைத்தவர்களிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் பணியாளர்கள், கோவில் நிர்வாக அதிகாரி ராதாவிடம் புகார் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திலகர் மீது சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story