தினத்தந்தி புகாா்பெட்டி


தினத்தந்தி புகாா்பெட்டி
x
தினத்தந்தி 9 April 2022 2:30 AM IST (Updated: 9 April 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி.


வேகத்தடை அமைக்கப்படுமா?

பெருந்துறையில் போக்குவரத்து கழக பணிமனை அருகே சிலேட்டர் நகருக்கு திரும்பி செல்ல புதிய ரோடு போடப்பட்டு உள்ளது. மேலும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சிலேட்டர் நகர் பகுதிக்கு செல்வதற்காக திரும்பும்போது குன்னத்தூரில் இருந்து வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. எனவே விபத்து ஏற்படாமல் தடுக்க குன்னத்தூர் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

செல்வராஜ், பெருந்துறை.

பராமரிப்பில்லாத கழிப்பறை

  ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கருங்கல்பாளையம் பகுதியில் 26-வது வார்டு வண்டியூரான் கோவில் எம்.ஜி.ஆர் நகரில் கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையில் கதவுகள் உடைந்து முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் இந்த கழிப்பறையை சிலர் மது குடிக்க பயன்படுத்தி வருகிறார்கள். எனவே கழிப்பறையை முறையாக பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், கருங்கல்பாளையம்.
  
குப்பையை அகற்ற வேண்டும் 

  கோபி டவுன் மாதேசியப்பன் வீதியில் ஒரு ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடை அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. பலர் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் வைத்து உள்ளனர். இந்த குப்பைக்கு அருகில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து தீப்பொறி விழுந்தால் பெரிய தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன், மின்மாற்றியும் சேதம் அடையலாம். மேலும் சமூக விரோதிகள் அங்கு குவிந்து கிடக்கும் குப்பையில் தீ வைத்தாலும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் குப்பையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், கோபி.
  
கரும்புகையால் கண் எரிச்சல் 

  கோபி அருகே உள்ள பச்சைமலை ரோட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இந்த குப்பையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தீ வைத்துவிட்டனர். இதனால் குப்பையில் இருந்து எழும்பும் கரும்புகையால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சுவாசக்கோளாறும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த ரோடு வழியாக பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ரோட்டில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை அகற்றவும், மீண்டும் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், பச்சைமலை.

Next Story