கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே காட்டூரில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சூர்யா தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்தும் கல்லூரி தேர்வுக்கு ஒரு தாளுக்கு 50 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 100 ரூபாயாக இருந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உயர்த்தப்பட்ட கட்டண விகிதங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story