திருமணம் ஆன 25 நாளில் புதுப்பெண் `திடீர்' மாயம்


திருமணம் ஆன 25 நாளில் புதுப்பெண் `திடீர் மாயம்
x
தினத்தந்தி 9 April 2022 4:48 AM IST (Updated: 9 April 2022 6:12 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே, திருமணம் ஆன 25 நாளில் புதுப்பெண் மாயமானார். அவர் எழுதி வைத்து விட்டுச்சென்ற கடிதத்தில், `வாழ்க்கை கசக்கிறது' என குறிப்பிட்டு உள்ளார்.

சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ராயகிரியை சேர்ந்தவர் அருணாதேவி (வயது 20). இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த ஒருவருக்கும் கடந்த மாதம் 13-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி இரவு வீட்டில் வழக்கம்போல் கணவனும், மனைவியும் சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்றனர்.

நேற்று முன்தினம் காலை 5 மணியளவில் திடீரென அருணாதேவி வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் சென்று விட்டார். அவருடைய வீட்டினர் காலையில் எழுந்து பார்த்தபோது புதுப்பெண் அருணாேதவியை காணவில்லை. அக்கம்பக்கத்தில், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்த பின்னர் அவர் மாயமானதை அறிந்து திடுக்கிட்டனர்.

இதுபற்றி சிவகிரி போலீஸ் நிலையத்தில் அவருடைய கணவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருணாதேவி எங்கு சென்றார்? என தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் அருணாதேவி வீட்டில் இருந்து செல்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்ததாக கூறப்படும் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், நமது வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. வாழ்க்கை கசக்கிறது. ஆகவே என்னை நீங்கள் தேட வேண்டாம். நான் ஓடுவதற்கு யாரும் காரணம் இல்லை, என குறிப்பிட்டு உள்ளார். 

திருமணம் ஆன 25 நாளில் புதுப்பெண் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான சம்பவம் பற்றி அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.




Next Story