கோயம்பேட்டில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


கோயம்பேட்டில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 April 2022 3:13 PM IST (Updated: 9 April 2022 3:13 PM IST)
t-max-icont-min-icon

கோயம்பேட்டில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

கோயம்பேடு மார்க்கெட் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 6 மாதங்களாக தனியார் பஸ் ஒன்றும் அதன் அருகிலேயே 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென அந்த பஸ்சில் இருந்து புகைவருவதாக வந்த தகவலையடுத்து, கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சின் டயரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

பஸ்சின் கண்ணாடிகள் மூடப்பட்டு இருந்ததால் கண்ணாடிகளை உடைத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் பஸ்சின் டயர் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. அங்கிருந்த குப்பைகளால் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்து விட்டுச் சென்றார்களா? என்ற கோணத்தில் கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை கிண்டி காந்தி மார்க்கெட் பின்புறம் உள்ள காலிமனை அருகில் உபயோகமற்ற 5-க்கும் மேற்பட்ட பழைய டிரான்ஸ் பார்மர்களும் எரிய தொடங்கியதால், அப்பபகுதி முழுவதும் கரும்புகையாக காணப்பட்டது.

Next Story