கார் மோட்டார்சைக்கிள் மோதலில் கட்டிட தொழிலாளியின் கால் துண்டிப்பு
கார் மோட்டார்சைக்கிள் மோதலில் கட்டிட தொழிலாளியின் கால் துண்டிப்பு
ஆரணி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் தனது காரை ஓட்டிக்கொண்டு ஆரணி வழியாக புதுச்சேரி செல்லும் வழியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக எதிேர ஆரணிைய அடுத்த இருப்பேடு காயத்ரி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரமேஷ் (27) தனது மோட்டார்சைக்கிளில் குடிபோதையில் வந்தார்.
ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலை அருகே வந்தபோது காரும், மோட்டார்ைசக்கிளும் மோதி கொண்டன. அதில் ரமேஷின் இடதுகால் துண்டாகி ஆபத்தான நிலையில் கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கார் டிரைவர் முருகன் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story