ரூ.5¾ கோடி ஹெராயினுடன் பெண் உள்பட 2 பேர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 9 April 2022 5:56 PM IST (Updated: 9 April 2022 5:56 PM IST)
t-max-icont-min-icon

மான்கூர்டில் ரூ.5¾ கோடி ஹெராயினுடன் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 
 மான்கூர்டில் ரூ.5¾ கோடி ஹெராயினுடன் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணிடம் விசாரணை
 மும்பை போலீசார் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக நகர் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மான்கூர்டு லல்லுபாய் காம்பவுன்ட் பகுதியில் துணை கமிஷனர் நீலோட்பால், குற்றப்பிரிவு யூனிட் 3-வது பிரிவு இன்ஸ்பெக்டர் சோபன் காகட் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
 அப்போது போதை வழக்கில் தேடப்பட்டு வரும் ஷமீம் காலித் கான் (52) என்ற பெண், ரபிக் ஹூசன் (67) என்பவருடன் அந்த வழியாக வந்தார். போலீசார் அவர்களை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.
 தண்ணீர் பாட்டிலில் போதைப்பொருள்
 இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த 2 தண்ணீர் பாட்டில்களை வாங்கி திறந்து பார்த்தனர். அப்போது அதற்குள் வெள்ளை நிற பவுடர் இருந்தது. விசாரணையில் அது ரூ.5¾ கோடி மதிப்பிலான 1 கிலோ 935 கிராம் ஹெராயின் என்பது தெரியவந்தது. 
 இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் காலித் கான் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் கைதாகி ஜெயிலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story