சொத்துவரி, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்-நாமக்கல்லில் நடந்தது
சொத்துவரி, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நாமககல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்:
சொத்துவரி உயர்வு மற்றும் பெட்ரோல்-டீசல் விலை, சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் ஆதம் பரூக், மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சொத்துவரி உயர்வு மற்றும் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், பாலியல் குற்றங்களை தடுத்திட கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் வசந்தி, மாவட்ட துணை செயலாளர் மகுடேஸ்வரன், மேற்கு மாவட்ட பொருளாளர் நந்தகுமார், கமல் நற்பணி மன்ற அமைப்பாளர் தியாகராஜன், நாமக்கல் நகர செயலாளர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் அருண், மல்லிகா உள்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story