எரவாஞ்சேரி ஊராட்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு


எரவாஞ்சேரி ஊராட்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 9 April 2022 6:10 PM IST (Updated: 9 April 2022 6:10 PM IST)
t-max-icont-min-icon

எரவாஞ்சேரி ஊராட்சியில் ஆய்வு செய்த கலெக்டர் அருண்தம்புராஜ் பிரதமர் வீடு கட்டும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

திட்டச்சேரி:
எரவாஞ்சேரி ஊராட்சியில் ஆய்வு  செய்த கலெக்டர் அருண்தம்புராஜ் பிரதமர் வீடு கட்டும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். 
கலெக்டர் ஆய்வு 
திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.  அதனைத்தொடர்ந்து பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
ஆய்வின் போது ஊராட்சி பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் பணிகளை தொடங்காமல் இருக்கும் பயனாளிகளை உடனடியாக தொடங்க அறிவுறுத்தினார்.
பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும்,  ஊராட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தி 100 நாள் வேலையை உடனே தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஆய்வின்போது எரவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
----


Next Story