அனைவரும் புத்தகம் படித்தால் வீட்டுக்கு ஒரு அரசு அலுவலர் உருவாகலாம். இலக்கிய விழாவில் கலெக்டர் பேச்சு
அனைவரும் புத்தகம் படித்தால் வீட்டுக்கு ஒரு அரசு அலுவலர் உருவாகலாம் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசினார்.
திருப்பத்தூர்
அனைவரும் புத்தகம் படித்தால் வீட்டுக்கு ஒரு அரசு அலுவலர் உருவாகலாம் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசினார்.
நிறைவு விழா
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட இலக்கிய, கலை மற்றும் பண்பாட்டு மன்றம் இணைந்து நடததிய புத்தக கண்காட்சி மற்றும் இலக்கிய விழா நிறைவு நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வரவேற்று பேசினார்.
விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
இலக்கிய திருவிழா மற்றும் புத்தகக் கண்காட்சி கடந்த 8 நாட்களாக நடந்தது. இதில் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. 2 லட்சம் பேர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். 2033 ஆம் ஆண்டிற்கு முன்பு நான் தமிழ் மொழியில் ஒரு புத்தகத்தை கண்டிப்பாக எழுதி வெளியிடுவேன். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது மக்களையும் புத்தகங்கள் படிக்க வைக்க இந்த இலக்கிய திருவிழா பெரிதும் பயனாக அமையும்.
அரசு அலுவலர்
இதுபோன்று அனைவரும் புத்தகங்களை படித்தால் இனிவரும் 10 ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒரு அரசு அலுவலர் உருவாகலாம். மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஒரு நூலகத்தை அமைக்க வேண்டும். நீங்கள் தினமும் புத்தகத்தை படியுங்கள் உங்கள் மனநிலை நன்றாக இருக்கும். ஆம்பூர் பகுதியில் உள்ள அனைத்து பிரியாணிகடைகளை ஒன்றுசேர்த்து வருகின்ற மே மாதத்திற்குள் ஆம்பூர் பிரியாணி திருவிழா 3 நாட்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஏலகிரிமலையில் கோடைவிழா நடைபெறவில்லை. வருகிற ஜூன் மாதத்தில் ஏலகிரி மலையில் கோடை விழாவை ஒரு வாரம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.
விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பழங்குடியினர் மக்களை அழைத்துவந்து கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் நன்றி கூறினார்,
Related Tags :
Next Story