பழையனூர்-பெருங்கடம்பனூர் சாலையில் புதிய மின்கம்பம் நடப்பட்டது


பழையனூர்-பெருங்கடம்பனூர் சாலையில் புதிய மின்கம்பம் நடப்பட்டது
x
தினத்தந்தி 9 April 2022 6:40 PM IST (Updated: 9 April 2022 6:40 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பழையனூர்-பெருங்கடம்பனூர் சாலையில் புதிய மின்கம்பம் நடப்பட்டது.

சிக்கல்:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பழையனூர்-பெருங்கடம்பனூர் சாலையில் புதிய மின்கம்பம் நடப்பட்டது. 
சாய்ந்த மின்கம்பங்கள்
நாகை மாவட்டம் சங்கமங்கலம் ஊராட்சி பழையனூர்‌-பெருங்கடம்பனூர் சாலையில் நீலியம்மன் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்த சாலையில் உள்ள 2 மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்தன. மேலும் மின்கம்பிகளும்  சாலையின் நடுவே தாழ்வாக சென்றன. 
இந்த வழியாக பெருங்கடம்பனூர், நாகூர், ஆழியூர், சிக்கல், நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.  தாழ்வாக செல்லும் மின் கம்பிகளில் வாகனங்கள் உரசி தீவிபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் எப்போது சாய்ந்து விழுமோ? என்ற அச்சத்தில் இருந்தனர். 
கோரிக்கை 
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும். தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த 8-ந்தேதி வெளியானது. 
புதிய மின்கம்பம்
இதன் எதிரொலியாக மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக பழையனூர்-பெருங்கடம்பனூர் சாலையில் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய மின்கம்பத்தை நட்டினர். மேலும் தாழ்வாக சென்ற மின்கம்பிகளையும் சரிசெய்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர். 
----


Next Story